உலகநாயகனின் இரண்டு வாரிசுகளும் தற்போது திரைத்துறையில் வெற்றி க்கதாநாயகிகளாக உலாவரத்தொடங்கியுள்ளனர். இதில் ஸ்ருதி, இசையமைப்பாளர், பாடகி, நடிகை என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்து கலக்கி வருகிறார், இந்நிலையில் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார்.இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது மும்முரமாகியுள்ளாராம் முதலில் குறும்படம் ஒன்றையும்,அதைத் தொடர்ந்து பெரிய திரை என களம் இறங்கவுள்ளாராம். ஸ்ருதி தற்போது விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.