ஹரிஷ் துரைராஜ் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கான் சிட்டி’. இதில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், நந்தகோபால், VTV கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி , அருள் தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக் , பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி , சதானந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை: ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்.
அர்ஜுன் தாஸுக்கு கடன் பிரச்சனை. கணவன் இல்லாத அன்ன பென்னுக்கு தன் மகனின் எதிர்கால பிரச்சனை. யோகிபாபுவுக்கு தனது அம்மா வடிவுக்கரசியின் மருத்துவ செலவு பிரச்சனை. இவர்கள் நால்வரும் வெவ்வேறு பண மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள் போலீசிடமிருந்து தப்பித்து ஒன்றாக சேருகின்றனர். அப்போது அன்ன பென் மகனை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடத்தி அவர்களை ஒரு பெரிய மோசடியில் ஈடுபட வைக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதை சொல்வதே கான் சிட்டி படத்தின் கதை.
இது ஒரு சிச்சிவேஷனல் டார்க் காமெடித் திரைப்படம். முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை வில்லனாக இறுக்கமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் சற்றே அதிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார்.
தான் ஏமாற்றப்பட்டதை போலவே, மற்றவர்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் அன்னா பென், நன்றாகவே நடித்திருக்கிறார்.
யோக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு. தனது அம்மா வடிவுக்கரசி மூலம் மோசடி நபராக மாற்றப்படும் கதாபாத்திரம். மோசமில்லை என்று சொல்லும் அளவில் நடித்திருக்கிறார். இரிக்கவும் வைக்கிறார்.
யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி. குறிப்பிடும்படி நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
மற்றபடி அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள், பின்னணி இசை குறை சொல்லும் வகையில் இல்லை.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சுவாரசியம் செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், சாதூர்யமாக செய்யப்படும் மோசடிகளையும், மனிதர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதையும் நன்றாக காட்சிப்படுத்தி விழிப்புணர்வையும் அலுத்தமாக சொல்லியிருக்கிறார். இதைப்போல் பல படங்கள் வந்திருந்தாலும், கொஞ்சம் ரசிக்கும்படி காட்சியமைக்கப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம்.
மொத்தத்தில், ‘கான் சிட்டி’ – மோசடி!












