சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? தலைமை ரசிகர் மன்றம் பரபரப்பு அறிக்கை!

585
SHARES
3.3k
VIEWS
நடிகர் சூர்யாவுக்கு  அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விஜய்யை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அகிய இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய  நிர்வாகி, சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என பேசியிருந்தார்.இது தமிழக அரசியல் வட்டாரத்தலும் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என  அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியள்ளதாவது,”கடந்த 28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட  இரா.வீரமணி  ‘இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி. அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

You might also like

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக .இரா.வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.அதேபோல் நடிகர் சூர்யாவுக்கு  அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜ் மற்றும் அமைப்பாளர் ஜி .ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.எனவே. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது 

Related Posts

Recent News

Actress

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?