கதையைத் திருடாதே!

  • ஒன்றை உன்னிடம் சொல்ல எண்ணிற்று :
  • நீ ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன்
  • நீயே எண்ணி நீயே எழுதுக!
  • உள்ளமதனை உறுதியால் தோண்டினால்
  • வெள்ளப் புதுக்கருத்து விரைந்து பாயும்.
  • அயலார் பாட்டின் அடியைத் தொடாதே
  • அயலார் பாட்டின் சில சொல் அகற்றி
  • உன் பாட்டென்றே உரைக்கவேண்டாம்
  • பிறரின் கருத்தைப் பெயர்த்தெழுதாதே
  • பிறரின் பேச்சின் சொல் தொட்டே வேண்டாம்
  • அடியைத் திருடிச் சொல்லைத் திருடிப்
  • படிந்த வழக்கம் அயலார் படைத்த  
  • நூலையே திருடும் நோயும் ஆனதே!
  • அதனால் அயலார் தமிழகத்தை 
  • மதியார் அன்றோ?பொங்கல் 
  • புதுநாள் போற்றடா!வாழ்த்தடா மகிழ்ந்தே! 

                            —பாவேந்தன் பாரதிதாசன்.