காக்கிச்சட்டைக்குள் ஆண்ட்ரியா.!

பவானி என்ட்டர்டேய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் பெயரிடப்படாத படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .கிளுகிளுப்பு,ஆடல்,பாடல் என அதகளம் பண்ணக்கூடிய ஆண்ட்ரியாவை காக்கிச்சட்டைக்குள் போட்டு அடக்குவதற்கு கதையில் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்?
ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் கதையில் இருக்கிறார்கள்.
ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் ‘ கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும்பணியாற்றி இருக்கிறார்.
சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.