என்னமோ நடக்கிது.மர்மமாய் இருக்குது என்கிற மாதிரி பவர் ஸ்டார் சீனிவாசன் மேட்டர் இருக்குது.
முதலில் அவரைத்தான் கடத்தி ஊட்டியில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். அவர் நேற்று சென்னைக்கு வந்து நான் கடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டு மருத்துவமனையில் படுத்து விட்டார்,
இன்று சீனிவாசனின் பி.ஆர்.ஒ.பிரீத்தி உள்பட பத்து பேர் பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியை கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பதாக சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பவர் ஸ்டாரே புகார் செய்திருக்கிறார் .
என்னதான்யா நடக்கிது?
மனைவியை ஊட்டியில் வைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.
ஒருவேளை சீனியைத் தேடி ஊட்டி போன மனைவியை பிடித்து வைத்துக் கொண்டு சீனியை ரிலீஸ் பண்ணி விட்டார்களா என்ன?
ஒண்ணுமே புரியலிங்க?
தேனியை சேர்ந்த நண்பரிடம் வாங்கிய கடனுக்காக ஊட்டியில் உள்ள நிலத்தை விற்கப்போவதாகத்தான் செய்தி வந்தது. ஆனால் நடப்பதைப் பார்த்தால் ஊட்டியில் பவருக்கு நிலம் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறதே! இன்னும் என்னென்ன நாடகம் நடக்குமோ தெரியவில்லை. பவர் தனது மனைவியுடன் பிஜேபியில் சேர்ந்தபோது எடுத்த படம்தான் இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.கடத்தப்பட்டது படத்தில் உள்ள பெண்தானா? பவர்தான் சொல்ல வேண்டும்!
ஊட்டியில் பவரின் முன்னாள் உதவியாளர் பிரீத்தி,ஆலன் உள்பட ஏழு பேரை போலீஸ் கைது செய்து விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.