பாமக.வை முந்தி கொண்டிருக்கிறது பாஜக.
தமிழகத்தில் இல்லை .ஆந்திராவில்.!
காசி நகரத்தின் பின்னணி,சாமியார் அருகில் நடிகை ஹன்சிகா காவி ஆடையில் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பார். படத்தின் பெயர் மகா.
இந்த முதல் போஸ்டருக்கு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து புயல் வீசும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐயா கண்டு கொள்ளவே இல்லை.நடிகைகள் மீது அனுதாபம். ‘பாவம் நடிப்புத்தானே’என விட்டு விட்டார் போலும்!
வம்படியா வந்து வண்டியில் ஏறி ‘நானும் இருக்கேன்’என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழக பாஜகவும் வாயைத் திறக்கவில்லை.
ஆனால் வந்தது பாருங்கள் கோபம் ஆந்திர பிஜேபி எம்.எல்.ஏ ராஜாசிங்குக்கு!
இயக்குநர் ஜமீலை உண்டு இல்லை என பின்னி இருக்கிறார்.
“இந்துக்களை மிகவும் மோசமாக காட்டியிருக்கிறீர்கள்.பர்தா போட்ட பெண்ணை இந்த போஸ்டர் மாதிரி மசூதியை பின்னணியாக கொண்டு போட முடியுமா?” என்று கேட்டு இருக்கிறார்.
இந்த போஸ்டர் இன்னும் என்னென்ன வம்புகளை கொண்டு வரப்போகிறதோ!பாவம் ஹன்சிகா ரொம்ப நாளைக்கு பிறகு லீடு ரோலில் நடிக்கிறார். உள்ள மதிப்பும் போய்விடும் போலிருக்கிறது.