கவின் -லாஸ்லியா காதல் என்ன அம்பிகாபதி அமராவதி காதலா?
நூறு நாளில் இனக் கவர்ச்சியினால் ஒருவித ஈர்ப்பு. ஒரே அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு இதுதான் ஸ்கிரிப்ட் என சொல்லப்பட்டதால் உருவாகிய மழைக்கால காளான்.
இதை தவறு என்று சொல்லியதால் கவின் லாஸ்லியா அபிமானிகள் படைப்பாளி சேரன் மீது கடுஞ் சொற்களால் வசை பாடினார்கள்.
சேரன் அதை புறந்தள்ளினார். இது தொடர்பாக நடிகர் விவேக் இயக்குநர் சேரனுக்கு சில அட்வைஸ் செய்தார்.அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட செய்திகளில் சில.
ஆமாம் சார்.. அதைத்தான் நாங்களும் சொல்ல முயல்கிறோம். நாங்கள் யாருக்கும் பதிலுக்கு பதில் பேச சொல்லல.. அதச்செய்யாதீங்கன்னு சொல்றோம்.. மரம் இல்லைன்னு நிறையபேர் சொன்னாங்க… நீங்க மரக்கன்று நட்டிங்களே… அது போல சார்….
மகிழ்ச்சி சார் இது பொதுமக்களுக்கான பதிவும்கூட.. நிறைய பெண்களோட பக்கங்கள்ல ஆபாசவார்த்தைகள், படங்கள்னு பதிவிடுற பழக்கம் உள்ளவங்களுக்கு.. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்கன்னு சொல்றதுக்கு.. நம்ம கார்ல போயிர்றோம் சார்.. இன்னும் சைக்கிள், பைக் மற்றும் நடந்துபோற மக்கள் இருக்காங்களே.
சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all.
மிக்க நன்றி விவேக் சார்… எல்லோரும் பன்படுத்தும் தளம் என்பதால் இந்த முன்னெடுப்பு.. உங்களைப்போன்றோரின் ஆதரவு அது போன்றவர்களை யோசிக்க வைக்கும்..
விவேக் சார்.! இதே அட்வைசை விஜய்- அஜித் ரசிகர்களுக்கும் சொல்லி வையுங்களேன்!