தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் ஏற்பட்ட கூட்டணிப் பிரச்சினையில், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மற்றும் கே.ஆர்.ராமசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என காட்டமாகத் தெரிவித்திருந்தனர். இது திமுக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய ‘சிஏஏ ‘எதிர்ப்புக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
இதற்கு கே.எஸ் . அழகிரியின் அறிக்கையே காரணம் என டெல்லி தலைவர்களிடம் டி .ஆர். பாலு எம்.பி. மூலமாக தெரிவித்தது.உடனடியாக கே.எஸ். அழகிரியை காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்து நடந்தது என்ன என்பதை கேட்டறிந்து அழகிரியை திமுகவுடன் சாதகமாக போகும்படி அறிவுறுத்தியது.கே.எஸ்.அழகிரியும் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் திமுக ,காங்கிரஸ் இரண்டும் இணைந்த கைகள் எங்களை யாரும் பிரிக்க முடியாது.கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என பேட்டியளித்தார்.
அதே சமயம் சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு, திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும் எனப் பேட்டி அளித்தார். தொடர்ந்து ,கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்கு, காங்கிரஸ் போக விரும்பினால் போகட்டும் ,காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை என்றும் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
நேற்று துரைமுருகன் அளித்த பேட்டியில், காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை என பேட்டி அளித்திருந்தார். இது திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. காங்கிரசின் அடுத்தகட்ட தலைவர்களும் திமுகவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னை விமான நிலையத்தில் இன்று மக்கள் நீதிமய்யகாட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக- காங்கிரஸ் தலைவர்கள் மாறி, மாறி பேட்டி அளிப்பதும், கூட்டணி பற்றிப் பேசுவதும் கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்போல் தெரிகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இக்கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், ‘‘திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.