
மது பிரியர்கள் மண்டை வீங்கி கிடக்கிறார்கள். சிலர் வார்னீசை குடித்து விட்டு போய் சேருகிறார்கள். இன்னும் சிலர் ஷேவிங் லோஷனை குடித்து உயிரை விடுகிறார்கள் ,
இதோ கின்னஸ் புகழ் ஆச்சி மனோரமாவின் மகன் பூபதியின் கதை.
ஆச்சி உயிருடன் இருக்கும்போதே தினமும் குடிப்பது வழக்கம்.அம்மாவும் சொல்லிப்பார்த்து சலித்துப் போய் விட்டார்.
ஒத்தைப்பிள்ளை செல்லமாக வளர்ந்த பிள்ளை. “பாப்பா”என்று கூப்பிடும்போதே ஆச்சி சரண்டர் ஆகிவிடுவார்.
என் பிள்ளை என்னை பாப்பா என்று கூப்பிட்டு விட்டானே என பெருமை அடைந்த தாய்.
மணம் முடித்து வைத்தும் மதுவை மறக்கவில்லை.
கடந்த 6 ஆம் தேதி மது இல்லை பூபதிக்கு.!
மாற்று வழியும் தெரியவில்லை . தூக்க மாத்திரையை போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
தற்போது சென்னை அப்போலா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.












