எஸ்.டி ஆரின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அடா சர்மா. பிறகு பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.தற்போது பாலிவுட்டில் கமாண்டோ-3படத்த்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிற அடா ஷர்மா , சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது உடற்பயிற்சி செய்வது போல் வித்தியாசமான கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு,‘நீங்கள் வரும்போது பாலத்தைக் கடக்கவும் …. ஆ ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…உடனே அது வெறும் பாலமாக மாறும்‘ என பதிவிட்டுள்ளார்..
வைரலாக பரவிவரும் படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “உங்களிடம் நாங்க வேற எதிர்பார்க்கிறோம்” என கிண்டலாக பதிவிட்டு இருந்தார்.அவருக்கு பதிலடி தரும் வகையிலோ,என்னவோ..அடா ஷர்மா, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்து,’நம்மை நாமே தற்காத்துக்கொள்ள என்னிடம் சிலம்பம் கற்றுக்கொள்ளலாம்.நான் வரும் நவம்பர் 3 ம் தேதி’ ப்ரீ”யாக இருக்கிறேன் அதன் பிறகு நான் நடித்து வரும் கமாண்டோ 3 படப்பிடிப்பில் பிசியாகி விடுவேன் என பதிவிட்டுள்ளார்.