“நீ வரும் பாதையில்
பூக்களாய் பூத்திருக்கும்!”
—காதலிக்காக காதலன் பாடுகிற வரிகள்.
தற்காலத்து பெண்கள் அல்லது ஆண்கள் இருபாலாருமே காதல் திருமணங்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
சாதி ,மதம் கடந்து நடந்து கொண்டு இருக்கிறது. ஆணவக்கொலைகளும் அவ்வப்போது நடக்கிறது.குற்றவாளிகள் நீதியின் பெயரால் தப்பித்துக் கொள்கிறார்கள்.அரசும் உதவி செய்கிறது. என்ன பண்ணமுடியும்?
காதல் திருமணம் பற்றி நடிகை ரீது வர்மா என்ன சொல்கிறார்?
“எனது திருமணத்துக்கு என்னுடைய சம்மதத்துக்காக என்னுடைய அப்பா,அம்மா காத்துக் கொண்டிருக்கிறார்கள்.கல்யாணத்தைப் பற்றி யோசிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது என்று சொல்லிவருகிறேன்.எப்போது எனக்கு இவன்தான் சரியான ஆள் என்று யாரைப் பிடிக்கிறதோ அப்போது நான் கல்யாணத்துக்குத் தயாராகிவிடுவேன்.எனக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. நான் காதல் திருமணம் செய்வதை விரும்புகிறேன்” என்கிறார் ரீது .