
“சார் ,பிரியங்கா சோப்ராவ பத்தி ஒரு நியூஸ்?”
“அப்படியா?” பரபரப்புடன் கேட்டார் ஆசிரியர் ” என்ன நியூஸ்?”
“முடி வெட்டிருக்கார் .படமும் வந்திருக்கு!”
“ஏம்பா ….யிரு வெட்டுனா கூட நியூஸா? மொட்டை அடிச்சிருந்தா கூட ‘நடிகை மொட்டை அடித்தார் .ரகசியம் என்ன?’ன்னு போடலாம்.இப்ப எந்த நடிகை நீளமா முடி வளர்க்கிறா? எல்லாமே குட்டை முடிதான்? கொண்டைய கூட சவுரி முடி வச்சுத்தான் போடுறாங்க!””
“பாலிவுட்ல பெரிய நடிகை. லண்டன்ல வாக்கப்பட்டு போயிருக்காங்க. ‘….கவலையில்லை .புது அழகு’ன்னு அவங்களே கேப்சன் போட்டுருக்காங்க. நாம்பளும் நியூஸ் போட்ட அவங்க ரசிகர்கள் சந்தோசப்படுவாங்கல்ல!”
“காலம் ரொம்பவே மாறித்தான் போயிருக்கு .நடிகை முடி வெட்டுனா கூட நியூஸ்…..சரி படத்தோடு போட்டுரு!”












