பிரதமர் மோடியின் ஆபீஸையே ஆட்டையை போட முயற்சி!!

பிரதமர் மோடி முன்னை விட  அழகாக இருக்கிறார். தாடியை அளவோடு வளர்த்திருக்கிறார். யாருடைய ஐடியாவோ? 
ஆனால்  அவரது ஆபிஸையே விலைக்கு கொண்டு வந்திருக்கிறது ஓ எல் எக்ஸ்  வலை தளம்.
என்னடா கொடுமை இது?
பீம் சிங் ! இது என்ன புது குழப்பம் ?
 மோடி உத்தரபிரதேச மாநிலம் காசி  பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். இதனால்  அங்கு ஆபிஸ்  போடப்பட்டது.
தற்போது  இந்த அலுவலகம் ஆன்லைன் விற்பனை தளமான ஓ எல் எக்ஸ் வலைதளத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. !
விலையையும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
 
இதன் விலை ரூ.7 கோடியே 50 லட்சம் ! 
அட பெருமாளே! பிரதமருக்கே  இப்படின்னா  அப்பாவி சப்பாவிக்கெல்லாம் என்னடா நடக்கும்?
போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.