வென்டிலேட்டர் கிடைக்கவில்லை.!நடிகையின் சகோதரர் கொரானாவுக்கு பலி.

இடம் ” உத்திர பிரதேச மாநிலம்,ஃபருக்காபாத் .தனியார் மருத்துவமனை.

நடிகை பியா தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் அதிகம். இந்தியில் குறைவு பிரபலமான நடிகைதான்.!

பியாவின் சகோதரருக்கு கொரானா தொற்று . மேற்சொன்ன தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சகோதரனின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் .வென்டிலேட்டர் உள்ள படுக்கைக்கு அவசரமாக மாற்ற வேண்டும் அல்லது வென்டிலேட்டர் பொருத்தப்பட வேண்டும்.

இரண்டுமே கிடைக்கவில்லை. நடிகை என்கிற செல்வாக்கை பயன்படுத்தி சமூக வலை தளங்களின் உதவியை நாடினார். பாஜக எம்.எல்.ஏ.வுக்கு ‘டேக்’ செய்தும் பலனில்லை. அவர் கண்டு கொள்ளவேயில்லை.

அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

பியாவின் சகோதரர் இன்று கொரானாவுக்கு பலியானார் .