தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது மாடலிங் துறை. தற்போது தமிழக இளைஞர்கள் இந்த துறையில் பலர் சாதித்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி , தேசிய அளவிலான ரூபரு மிஸ்டர்.இந்தியா பட்டத்திற்கான போட்டியில் வென்றதோடு, ‘பீப்பிள்ஸ் சாய்ஸ்’, என்ற விருதையும் வென்றிருக்கிறார்.
மாடலிங் துறையை தொடர்ந்து, அடுத்தாக சினிமாத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து கோபிநாத் கூறுகையில், “நான் மாடலிங் துறையில் இருக்கும் போது எனக்கும் சினிமா பட வாய்ப்புகள் வந்தது. , பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘பகிரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய வேடமாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் அதில் நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து மேலும், தற்போது மூன்று படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, இப்படங்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்.