மாடல் ரியா பிள்ளை நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி. இவரும் நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயசும் காதலித்தார்கள். ஒரு நட்சத்திர ஓட்டலில் வாசம் செய்த காலத்தில் பயஸ் -ரியா கல்யாணம் நடந்தது.
“கணேசா ,நீயே சாட்சி “என்று மும்பையில் இருக்கிற விநாயகர் கோவிலில் வைத்து மாலைகள் மாற்றிக்கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கியவர்கள். பயஸ் ஒரு கிறித்தவர்.அதனால் கல்யாணம் செல்லாது என வாதிடுகிறார்.
“சரிப்பா அந்த அம்மாவுடன் குடும்பம் நடத்தி பிள்ளையை பெத்துக்கிட்டியே அதுக்கு இன்னாபா சொல்றே”?
இப்ப அது இல்ல மேட்டர்?
பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவும் லியாண்டர் பயசும் ஒரே அலைவரிசையில் இருப்பதாக வெளியான செய்தி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நடிகை கிம் மணமானவர்தான்.!இருவருமே செகன்ட் ஹாண்ட்ஸ் !கிம்முக்கு இப்ப வயது 41.
அதனால் என்ன இளமையோடு இன்னமும் கொந்தளிப்புடன்தானே இருக்கிறார்.!
இருவரும் தங்களின் முதலாவது காதலுக்கு துரோகிகள் ஆகிவிட்டவர்கள்.!எக்கேடு கெட்டால் என்ன என்கிறீர்களா ?அது உங்களது கருத்து.
1