இன்று திருவள்ளுவர் தினம் தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது, திருவள்ளுவர் தினத்துக்காக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் செய்தி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், விழா ஒன்றில் திருவள்ளுவரைப் பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது,
“திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில்தான் அதிமுகவும் உள்ளது.சாதி, மதம், இனம் பேசும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் அறிய மருந்து திருக்குறள். சாதி, மதம், இன வழி செல்வோர் அறவழி போதிக்கும் திருக்குறளை படித்து பின்பற்ற வேண்டும்.திருக்குறள் படித்தால் அகவழி மணக்கும், மனமது தெளிவு பெறும், மனிதகுலம் தழைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.