பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில்,ஜல்லிக்கட்டு வரலாற்றுக்கு தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில்,
“அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.
இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை “இந்துக்கள்” பின்பற்றி வருகின்றனர்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டரில் காவி உடையில் வள்ளுவர் படத்தைப் பகிர்ந்து பின்னர் ஏற்பட்டசர்ச்சையைத் தொடர்ந்து அவர் அப்படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை புராணக் கதைகளுடன் தொடர்புபடுத்தி இந்துக்களின் விளையாட்டு என்ற தொனியில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.