Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Cooking

தயிர் சாதம் ….வாங்கோ…சாப்பிட்டுப் பாருங்கோ.

admin by admin
November 12, 2025
in Cooking
449 4
0
628
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயிர் சாதம் தானே என்று நினைக்க…… அதன் செய்முறையை படியுங்கள்…… நாவில் எச்சில்  வரும்….🤤🤤🤤

You might also like

மதுரை ஸ்பெஷல் ‘விரால்மீன்’ குழம்பு செய்வது எப்படி?

உடலுக்கு ‘வலு’ சேர்க்கும் ‘உளுந்தங்களி’ செய்வது எப்படி?

சூப்பர் புளியோதரை செய்வது எப்படி?

கல்யாண சமையல் சாதம்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த ஊணுமில்லை.

எப்பிடி?

வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன வயத்தை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க முடியாது.

கோவில்கள்ள தயிர் சாதத்தை ஒரு தொன்னைலேயோ, கையிலயோ குடுப்பா. கோவில் பிரசாதத்துக்குன்னு தனி டேஸ்ட், வாசனை இருக்கும்.

பசுந்தயிர் ஒரு நல்ல வாசனையோட, லைட்டா புளிப்போட இருக்கும்.

“முட்டாளுக்கு மூணு வேளையும் தயிர் சாதம்”ன்னு ஒரு வாசகம் உண்டு. ஆனா, எப்பவும்போல நாம அதோட அர்த்தத்தை தலைகீழாவே புரிஞ்சுப்போம்.

ஏதோ ஒரு ஜென்மத்தில நிச்சயம் வௌவாலாப் பொறந்திருப்போமோ என்னவோ?

அடி முட்டாளா இருக்கறவனைக்கூட தயிர் சாதம் மேதாவியா ஆக்கிடும்ங்கறதுதான் சரி.
ஏன்னா…அதோட சத்து அப்படி!

தயிர் சாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ளர் தண்ணிர்  விட்டு வடிக்கணும்.

சாதம் ஆறதுக்குள்ள, ஜிலுஜிலுன்னு கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.

இப்போ சாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெய் [கொலஸ்ட்ரால் !!ன்னு யாரும் பேசக்கூடாது!] பகவான் கிருஷ்ணனை நெனைச்சுண்டு பண்ணினா, எதுவும் ஒண்ணும் பண்ணாது.

வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற சாதத்துக்குள்ள போட்டு, உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பெசியணும். வெண்ணெய் போடறதால, தயிர் சாதம் வெள்ளைக் கலரா, வெழுமூண  இருக்கும்.

ஓகே…..

இப்போ சாதம் ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை அதோட தலைல விட்டு, கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டதுனால, தயிருக்கு தன்னோட மனுஷாளைப் பாத்த சந்தோஷத்துல ஜோரா ரெண்டும் ஒண்ணா சேர்ந்துண்டு, தயிர்சாதம் இப்போ… வெண்ணைக்கட்டியா இருக்கும்.

இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி entry!

நன்னா ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாட்டா, பச்சைக் கலர், லேஸா ப்ரௌன் கலரா மாறிடும்.

Now, ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, [மிளகா வத்தல் optional] தாளிச்சு, அழகா ப்ரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல போடணும்.

கரண்டியில சாதத்தை எடுத்து விட்டா, அப்டி வழியணும்!

இனிமேத்தான் ஜொள்ளோட லெவல் ஜாஸ்தியாகும். Sometimes, overflow ஆகலாம்!

இதுக்குத் தொட்டுக்க என்ன?

வெறும் இஞ்சியை பொடியா நறுக்கி, உப்பு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடலாம்;
இலுப்பைச்சட்டியை வெச்சு, மொறு மொறுன்னு கொஞ்சம் மோர்மிளகாய் நன்னாக் கறுப்பா வறுத்துக்கலாம்;

மோர்மிளகாய்ல, அது வெள்ளையா [வறுக்கும் முன்] இருக்கறப்போ பளபளன்னு, மொழுக்குனு இருந்தா, அந்த மிளகாய் பயங்கர காரமா இருக்கும்.

மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிர்சாதத்தோட சாப்பிட்டா, ஒவ்வொரு வாய்க்கும் அட்லீஸ்ட் அஞ்சாறு வத்தலாவது அகப்படும். அதுனால, நம்ம நாக்கும் மூக்கும் நம்மளை வாழ்க வாழ்கன்னு வாழ்த்தும்.

அடுத்தது, வேப்பிலைக்கட்டி. [நில்கிரிஸ்ல கிடைக்கறது] வேப்பிலைக்கட்டியைக் கண்டு பிடிச்சவாளுக்கு ஒரு ஷொட்டு ! மாவிலைக்கட்டி, ஆலிலைக்கட்டின்னு இல்லாம, வேப்பிலைக்கட்டின்னு பேரை வெச்சாலும், எலுமிச்சை, நாரத்தை இலையில பண்ற இந்த ஐட்டத்துக்கு ஒரு ஜே! [நல்லவேளை நெஜமாவே வேப்பிலையை இடிச்சு பண்ணலை]

கார்த்தால பண்ணின வத்தக்குழம்பு, கீரை மிஞ்சியிருந்தா! ரெண்டையும் ஒண்ணாக் கலந்து ஜோரா கொதிக்க வெச்சுக்கணும். க்ரீம் பிஸ்கட் நடுவுல ஒரு குழிக்குள்ள க்ரீம் இருக்கறாமாதிரி, தயிர் சாதக்குழிக்குள்ள இந்த ப்ரௌன் கலர் குழம்பு இருக்கும். ஆஹா! என்ன lovely, colourful combination !!

ஒண்ணுமே தொட்டுக்க இல்லைன்னா, don’t worry! இட்லி மிளகாய்ப்பொடியை கலந்து சாப்பிட்டுப் பாருங்கோ!

சாதத்துல மோரை நிறைய விட்டு, கரைச்சாப்பல சாப்பிடும் போதும், மிளகாய்ப்பொடி ஜோரா இருக்கும்.

அப்பறம் மாவடு!

கேரளா டைப்புல காரமா, கெட்டியா மாவடு [Thangam மாவடு] இருந்தா, அதோட தண்ணீரை அப்பிடி சைடுல விட்டுண்டு தோச்சுண்டு சாப்பிட்டா, மூக்குலயும் taste buds வந்தா மாதிரி இருக்கும்.

மாகாளிக்கிழங்குன்னு நீளநீளமா ஒரு கிழங்கு. அதை தோல் சீவி, பொடிப்பொடியா நறுக்கி, மோர்ல உப்பு காரம் போட்டு ஊறவெச்சு இருப்பா.

சிலபேருக்கு அந்த வாசனை பிடிக்காது. பிடிச்சவாளுக்கு மாகாளிக்கிழங்கு ஆஹா, ஓஹோதான்!

எலுமிச்சங்கா, கிடாரங்கா, நெல்லிக்கா, ஆவக்காய் ஊறுகாய் இதெல்லாம் தயிர்சாதத்துக்கு நாலு தூண்கள்!

பச்சைப்பசேல்ன்னு வாழை இலைல வெள்ளைவெளேர்ன்னு வெண்ணைக்கட்டியா தயிர்சாதம் ! என்ன அழகு!

உடம்பு சரியில்லியா? காய்ச்சல் இருந்தாலும், ஜில்லுனு இல்லாம, அம்ஸமா ஒரு தயிர் சாதத்தோட காய்ஞ்ச நார்த்தங்கா இருந்தா போறும்! பரம ஔஷதம்!

Afterall ஒரு தயிர்சாதத்துக்கு இத்தனை buildup-பான்னு சிலபேருக்கு தோணும். ஆனா, அதோட அருமை தெரிஞ்சவாளுக்குத்தான் இது புரியும்.

—இந்திரா காசிநாதன்

Tags: செய்முறைதயிர் சாதம்
admin

admin

Related Posts

Cooking

மதுரை ஸ்பெஷல் ‘விரால்மீன்’ குழம்பு செய்வது எப்படி?

by admin
November 12, 2025
Cooking

உடலுக்கு ‘வலு’ சேர்க்கும் ‘உளுந்தங்களி’ செய்வது எப்படி?

by admin
November 12, 2025
Cooking

சூப்பர் புளியோதரை செய்வது எப்படி?

by admin
November 12, 2025
ருசியான பெருமாள் கோவில் புளியோதரை செய்யும் முறை!
Cooking

ருசியான பெருமாள் கோவில் புளியோதரை செய்யும் முறை!

by admin
January 8, 2020
சுவையான பன்னீர் ’65’ செய்யலாம் வாங்க!
Cooking

சுவையான பன்னீர் ’65’ செய்யலாம் வாங்க!

by admin
January 5, 2020

Recent News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?