எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதா? – வாசகர், விழுப்புரம்
உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மிதுன ராசி. லக்னம், குடும்ப ஸ்தானம் பூர்வபுண்ணிய ஸ்தானம் ஆகிய ராசிகள் வலுத்திருக்கின்றன. தற்சமயம் சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் அரசு வேலையும் கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். நீங்கள் இதுவரை செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது மற்றும் சரியானது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.