நான் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது கால் முட்டியில் வலி அதிகமாக உள்ளது. காலையில் நடப்பதற்கே அஞ்சுகிறேன். இதற்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று எலும்பு மருத்துவர்கள் சொல்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? ஆயுள் எவ்வாறு உள்ளது?
– வாசகர், வில்லிவாக்கம்
உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் ராகு மகா தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் மூட்டு வலி குறையத் தொடங்கும். மற்றபடி ஆரோக்கியத்தில் வேறு எந்த பெரிய குறையும் ஏற்படாது. தொடர்வது பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் தசையாகும். மூட்டு மாற்றுஅறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு.