கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தரமான வேலை அமையவில்லை. பல இடங்களில் நேர்முகத் தேர்விலும் நிராகரிக்கிறார்கள். எதிர்வரும் சுக்கிர தசையில் சினிமாவில் நுழைய விரும்புகிறேன். நடிகராக ஆக வாய்ப்பு உள்ளதா? 43 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. சுக்கிர தசையில் திருமணம் நடைபெறுமா? – வாசகர், திருச்சி
உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னாதிபதி களத்திர, நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். தன, பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் தொழில் செய்யலாம். வங்கி, காப்பீடு போன்ற துறைகளும் ஏற்றது. சினிமா, ஜோதிடம் போன்ற துறைகளில் பகுதி நேரமாக ஈடுபடலாம். மற்றபடி சுக்கிரமகா தசை பிரகாசமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.