சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,
“காஷ்மீர் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த விவகாரத்தில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. மேலும்,இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நிகழ்வுகளை, அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், டிரம்ப்பின் கருத்துக்கு பதிலளித்து கூறியுள்ளதாவது,”காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை. இது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்னை. காஷ்மீர் விஷயத்தில் நமது நிலைப்பாடு எந்தவித மாற்றமுமின்றி தெளிவாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.